எல்லை இல்லாப் பெரும் தூயோனே!
உன்னை எந்நாளும்; வேண்டித் துதிக்கின்றோம்! (II)
தொல்லை தரும் இரட்சை நீக்கியே!
எம்மைத் தூயவராக்கியே வைப்பாயே!
எல்லை இல்லாப் பெரும் தூயோனே!
உன்னை எந்நாளும்; வேண்டித் துதிக்கின்றோம்!
(எல்லை)
அல்லும்பகலும் உன் அன்பிலே!
நாம் அறிவினைப் பெற்றிட வேண்டுமே!
சொல்லிலும் செயலிலும் அன்போனே!
நாம் தூய்மையாய் வாழ்ந்திட வேண்டுமே!
(எல்லை)